ஜிஎஸ்டி நிலுவை தொகை: கனிமொழி, திருநாவுக்கரசர் கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்….

டெல்லி: ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாக  தமிழக எம்.பி.க்களான கனிமொழி, திருநாவுக் கரசர்  பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுங்ககு  மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்தார்.
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரின்போது, திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ஆகியோர், ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாக கேள்வி எழுப்பினர். தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகை எப்போது வழங்கப்படும் என்றும் கேள்வி எப்பப்பட்டது.
இதற்கு   மத்திய இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பதில் அளித்து பேசினார்.
அப்போது, ஜிஎஸ்டி இழப்பீட்டு சட்டத்தின்படி கடந்த 2019 ஏப்ரல் முதல் மார்ச் 2020 வரை மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கவேண்டிய தொகை வழங்கப்பட்டு விட்டது.
ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வசூலில் இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள குறைவின் காரணமாக ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
தமிழகத்திற்கு மட்டும் சுமார் 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்குவது தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  மாநிலங்களின் தனிப்பட்ட விருப்பப்படி இந்த விவகாரம் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.