டில்லி

ஜி எஸ் டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க உள்ளதாக நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் முதல் நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வர்த்தகம் மற்றும் தொழிலக நடவடிக்கைகள் முடங்கின.   இதனால் அனைத்து மாநிலங்களுக்கும்  கடும் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு நிதி நெருக்கடியில் சிக்கின,

இந்நிலையில் மத்திய அரசு அளிக்க வேண்டிய ஜி எஸ் டி நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு அளிக்கப்படாமல் இருந்தது.  தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை அளிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தன.

இன்று ஜிஎஸ்டி குழுக் கூட்டம் நடந்தது.   அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கு ஜி எஸ் டி நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக மாநிலங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை இன்று இரவே வழங்க உள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.