டில்லி,

யில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்  ரயிலில் வழங்கப்படும் உணவுகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில்வே உணவுகள் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி எதிரொலியாக உணவு பொருட்களின்  விலையை உயர்த்த வேண்டும் என காண்டிராக்டர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து புதிய விலைப்பட்டியல் தயாரிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி  30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட உள்ளது. இதனால் காரணமாக ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயிலில் விற்கப்படும்  டீ, காப்பி மற்றும் காலை உணவு, மதிய சாப்பாடு என அனைத்துமே விலை உயருகிறது.

தற்போது காப்பி, டீ விலை 7 ரூபாயும், காலை உணவு 30 ரூபாயும், காலை அசைவ உணவு 35 ரூபாயும், மதிய சாப்பாடு 50 ரூபாயும், அசைவ உணவு 55 ரூபாயும் விலை உள்ளது.

இவை ஒவ்வொன்றிலும் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.