உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு

டெல்லி:

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் விஜயன் பவனில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 18-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இதில், டிராக்டர் உதரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 28%இல் இருந்து 18% ஆக குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரங்கள் மீதான ஜிஎஸ்டி 12%இல் இருந்து 5% ஆக குறைக்க இதில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.