ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களின் உரிமைகள் பாதுக்கப்பட வேண்டும் : நிதியமைச்சர் ஜெயக்குமார்

--

சென்னை:

துபான பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

டெல்லியில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஜிஎஸ்டி வரியால் உற்பத்தி மற்றும் அதிகமாக ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும். அதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய தனியே ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் அவர் விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்களின் மீது உள்ள வரியைக் குறைப்பதால் ஏற்படும் இழப்பீடுகளை சமாளிப்பது எப்படி என்று மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

பெட்ரோலியம் மற்றும் மதுபான பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு வேண்டும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை வைத்ததை நினைவுகூர்ந்தார். அந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களின் உரிமைகள் பாதுக்கப்பட வேண்டும் என எடுத்துரைத்ததாக  கூறினார். ஜிஎஸ்டி தொடர்பான அடுத்த கூட்டம் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்