ஜிஎஸ்டி வரி குறையும்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

சென்னை:

மிழகத்தில் ஜிஎஸ்டியில் பல பொருட்களின் வரி குறைய உள்ளது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இன்று தலைநகரில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் ஜெயக்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  இந்த கூட்டத்தில், 11 பொருட்களுக்கு சேவை வரி குறைப்பது குறித்தும்,  75 பொருட்க ளுக்கு வரிவிலக்கு மற்றும் வரி குறைக்க வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.

சமீபததில்,  நடுத்தர மக்களின் நலனுக்காக ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வரும் 99 சதவிகிதப் பொருட்கள் 18 விழுக்காடு வரிக்கு கீழாக கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்  டில்லியில் நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று 31வது ஜி.எஸ்.டி. கவுன்சில்  கூட்டம்  நடைபெறுகிறது. தற்போது, ஜிஎஸ்டி வரி  5, 12, 18 மற்றும் 28 சதவிகிதங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல மாற்றங்களை செய்ய இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது 28 விழுக்காடு வரியின் கீழ் கம்ப்யூட்டர் மானிட்டர், டிவி பெட்டிகள், ஏசி, உள்பட சிமெண்ட், டயர்கள் போன்ற பொருட்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், புகையிலைப் பொருட்களுக்கான வரி 28 சதவிகிதமாகவே நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.