டில்லி,

ன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஜனதாதிபதியும், பிரமரும் இணைந்து ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிமுக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  ஜி.எஸ்.டி. வரி விதிப்பால்  ஏழை- எளிய மக்களுக்கும், சிறுவியாபாரிகளுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார்.

மேலும், மோடி பேசும்போது  பகவத்கீதை குறித்து, சந்திரகுப்த மவுரியர் கால அமைச்சர் சாணக்கியர் பற்றியும், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போன்றோரை உதாரணமாக கூறி பேசினார்.

இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நள்ளிரவில் தொடங்குவதாகவும், இதன் காரணமாக ஏழை-எளிய மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார்.

ஜிஎஸ்டிக்கு புது விளக்கமாக  good and simple tax என்று கூறினார்.

மேலும், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களைப் போல் ஜிஎஸ்டி கவுன்சிலும் 18 முறை கூடியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஒரு பொருளுக்கு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விலை என்ற நிலை இனி மாறும் என்றும், போலியான பில்கள் மூலம் வியாபாரம் நடத்தி கறுப்புப்பணம் பெருகுவதற்கு முடிவு கட்டப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. வெளிப்படையானது என்றும், நாடு முழுவதும் விதிக்கப்பட்டு வந்த 500க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வருவதால் வரித் தீவிரவாதத்தில் இருந்து வியாபாரிகளுக்கு விடுதலை அவர் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடக்கத்தில் சில அச்சங்களை ஏற்படுத்தினாலும், நாளடைவில் அது சரியாகிவிடும் என்றும் கூறினார்.