டில்லி:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ் உளவு பார்த்தாக குற்றம்சாட்டி அவரை பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தது. ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

குல்பூஷண்

அவருக்கு அங்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவம் தீர்ப்பு வழங்கியது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தொழில் ரீதியாக ஈரான் சென்றிருந்த அவரை பாகிஸ்தான் கடத்தி சென்றாக புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச நீதிமன்றம் தலையிட்டதன் பேரில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குல்புஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாய்க்கு மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்களுடன் இந்திய தூதர அதிகாரிகளும் இருக்கலாம். இந்த சந்திப்பு பாகிஸ்தான் மண்ணில் தான் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியும், தாயும் அவரை சந்திக்க வரும்போது இருவரையும் துன்புறுத்துவதோ அல்லது கேள்விகள் கேட்பதோ கூடாது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் உறுதி அளிக்க கோரி இந்தியா கடிதம் எழுதியுள்ளது. இந்த தகவலுக்கு பாகிஸ்தான் இது வரை பதிலளிக்கவில்லை. எனினும் நல்ல தகவல் வரும் எதிர்பார்ப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.