குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்!

வேலூர்:

குடியாத்தம் ( தனி ) தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் காத்தவராயன். திமுகவைச் சேர்ந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இவர் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திருமணம் செய்துக்கொள்ளாமல் அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்தி வந்தனர், தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்துவந்தார்.

இவர் ஏற்கனவே ஹார்ட் அட்டாக் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த மாதம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடைபெற்றது. அதன்பிறகு தீவிர சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை, திமுக தலைவர் ஸ்டாலின் சென்று பார்த்து வந்தார்.

அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாமல் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், தற்போது, அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

நேற்றுமுன்திம் (பிப்ரவரி 27ந்தேதி)  திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போது எம்.எல்.ஏ வாக உள்ள கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததுள்ள நிலையில், இன்று மற்றொரு திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடமாக இருப்பது திமுகவினரை கவலையடைய செய்துள்ளது.

இதற்கிடையில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் கோமா நிலையில் கவலைக்கிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.