குட்கா ஊழல்: கைது செய்யப்பட்டுள்ள 6 பேரின் சிறைக்காவல் ஜனவரி 9வரை நீட்டிப்பு

சென்னை:

டை செய்யப்பட்ட குட்பா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்ய ரூ.40 கோடி அளவில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணையை சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐக்கு மாற்றிய நிலையில், குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களின் சிறைக்காவல் மேலும் 15நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 9ந்தேதி வரை அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ கடந்த வாரம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட விஜயபாஸ்கர் உதவியாளரிடமும் விசாரணை நடத்தியது.

ஏற்கனவே குட்கா ஊழல் தொடர்பாக குட்கா குடோன் அதிபர் மாதவராவ், சீனிவாசராவ், குப்தா மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பாண்டியன், செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள  தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர போலீஸ் ஆணையாளர் ஜார்ஜ் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி