துபாய்: கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைப் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், உலகெங்கும் அவற்றை பெரியளவில் கொண்டுசேர்க்கும் வகையில், சரக்கு விமானப் போக்குவரத்து துறையின் சிறப்பான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது சர்வதேச விமானப் போக்குவரத்து கழகம்(ஐஏடிஏ).

அரசுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து தொடர்பு அமைப்புகளுக்கு, உலகின் மிகப்பெரிய பொருள் போக்குவரத்து சேவையை நிகழ்த்துவது குறித்த பரிந்துரைகளை ஐஏடிஏ அமைப்பு வழங்கியுள்ளது.

இந்த வழிகாட்டுதலானது, பல பெரிய சர்வதேச அமைப்புகளின் துணையுடனேயே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டர்நேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன்(ஐசிஏஓ), இண்டர்நேஷனல் பெடரேஷன் ஆஃப் ஃபிரைட் பார்வார்டர்ஸ் அசோசியேஷன்(ஃபிளாட்டா), இண்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் பார்மசூடிகல் மேனுபேக்சரர்ஸ் அண்ட் அசோசியேஷன்ஸ்(ஐஎஃப்பிஎம்ஏ), பேன் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன்(பிஏஎச்ஓ), யுகே சிவில் ஏவியேஷன் அதாரிட்டி, உலக வங்கி, வேர்ல்டு கஸ்டம்ஸ் ஆர்கனைசேஷன்(டபிள்யூசிஓ) மற்றும் வேர்ல்டு டிரேட் ஆர்கனைசேஷன் போன்ற அமைப்புகள்தான் அவை.