நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறப்பு : வழி முறைகள்

டில்லி

ரும் 6 ஆம் தேதி முதல் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்க உள்ளதால் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாத இடையில் இருந்து நாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவிடங்கள் மூடப்பட்டன.   ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டதால்  இவை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன.  வரும் 6 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது  அவை பின் வருமாறு:

கொரோனா பாதிப்பால் கட்டுப்பாடு விதிக்கப்படாத மண்டலங்களில் அமைந்துள்ள நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும்.

இவற்றுக்கு மறு உத்தரவு வரும் வரை இ நுழைவுச் சீட்டுகள் மட்டுமே வழக்க வேண்டும்.

வாகன நிறுத்தம், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.

நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் நுழைவாயிலில் கிருமி நாசினி, உடல் வெப்ப சோதனை கருவி ஆகியவை இருக்க வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் இல்லதோர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த வளாகங்களுக்குள் குழுவாகப் புகைப்படம் எடுக்கவோ எவ்வகை உணவையும் சாப்பிடவோ கூடாது.

இங்குள்ள ஒலி ஒளி காட்சிகளுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைக் குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்

என அறிவிக்கப்பட்டுள்ளன.