Random image

கும்பல் கொலைகளை தடுக்கும் நெறிமுறைகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி:

நாடு முழுவதும் நடைபெற்று வரும் கும்பல் கொலைகளை தடுக்கும் நெறிமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நாடு முழுவதும் மாட்டிறைச்சி விவகாரம் பலர் சமூக விரோத கும்பல்களால் அடித்து கொல்லப்பட்டனர். இதுபோன்ற வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்சநீதி மன்றம், கும்பல் கொலைகளை தடுக்கும் நெறிமுறைகளை உடனே செயல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு  அறிவுறுத்தியது. மேலும்,  கும்பல் கொலைகளை தடுக்க வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.