டில்லி

நாடெங்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலையங்களுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  அந்த ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டு மே மாதம் 31 வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.  ஜூன் 1 முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் இந்த மாதம் ஊரடங்கு தளர்வு 3.0 அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட தளர்வுகளின் படி நாடெங்கும் உள்ள யோகா மற்றும் உடற்பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல்  திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  ஆயினும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மது பான விடுதிகளுக்கான தடை நீடிக்கிறது  இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  அந்தந்த மாநிலங்களின் நிலைக்கேற்ப இந்த விதிகளை மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

யோகா மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு அளித்துள்ளது.  அதன்படி  குறிப்பாக கொரோனா தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் இவற்றைத் திறக்க அனுமதி இல்லை.

இந்த நிலயங்களின் நுழைவாயில்  சானிடைசர் அவசியம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.  சமூக இடைவெளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.   முகக் கவசம் அவசியமாக்கப்பட்டுள்ளது.