இந்திய ஜனாதிபதிக்கு கினியா அரசின் உயரிய விருது

கொனாக்ரி, கினியா

ந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கினியா நாட்டின் உயரிய  விருதான நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது பெனின், காமியா, கினியா ஆகிய நாடுகளுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு கினியா நாட்டில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது, உயர்நிலை அதிகாரிகள் ஜனாதியுடன் இரு நாட்டுக்கு இடையில் உள்ள பரஸ்பர உறவு குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.

இந்திய ஜனாதிபதி கினியாவுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். கினியா நாட்டின் உயரிய விருது நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் விருதாகும். இந்த விருதை அந்நாட்டு அரசாங்கம் இந்திய ஜனாதிபதியை கவுரவிக்கும்  வகையில் ராம்நாத் கோவிந்துக்கு வழங்கி உள்ளது.

இந்த விருதை ஏற்றுக் கொண்ட இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதை இந்திய மக்களுக்கும் கினியா மக்களுக்கும் சமர்ப்பணம் செய்வதாக அறிவித்துளர். இன்று அதிகாலை தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்திய  ஜனாதிபதி ராம்நாத் க்விந்த் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்.