திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஆகிய திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா என்ற படத்தில் பிரபுதேவா நடிக்கிறார் .

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அமீரா தஸ்தர் நடிக்கிறார். தி ஜங்கிள் புக் என்ற பிரபல காமிக் கதையில் அதில் வரும் கறுஞ்சிறுத்தையின் பெயர் பஹீரா.

அந்த சிறுத்தையை போல குணம் கொண்டவன் தான் இந்த படத்தில் நாயகன். எனவே தான் பஹீரா என்ற பெயர் வைக்கப்பட்டது என பிரபுதேவா கூறியுள்ளார்.

தற்போது ‘பஹீரா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவதை ‘கின்னஸ்’ பக்ரூ தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

2 அடி 6 அங்குல உயரம் இருக்கும் பக்ரூ, உலகிலேயே ஒரு திரைப்படத்தில் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்த உயரம் குறைவான நடிகர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இதனால்தான் இவரது பெயர் ‘கின்னஸ்’ பக்ரூ என்று மாறியது.

பரதன் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.