கின்னஸ் சாதனை படைத்த வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்

காந்திநகர்:

உலகளவில் அதிக வெட்டுக்களை (6,690) கொண்ட வைர மோதிரம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மோதிரம் குஜராத்தில் ஏலம் விடப்படவுள்ளது.

தாமரை மலர் போன்ற தோற்றம் கொண்ட அந்த மோதிரத்தில் 36 இதழ்கள் உள்ளது. 58 கிராம் எடை கொண்ட இதில் மோதிரத்தை விஷால் மற்றும் குஷ்பூ விஷால் தம்பதியர் வடிவமைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.27 கோடியாகும்.

ஏலத்தின் ஆரம்ப விலை இன்னும் உறுதியாகவில்லை. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற வைர மோதிரம் என்பதால் ஏலத்தில் உலகளவில் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.