குஜராத்தில் பயங்கரம்: ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 2 வீடுகள் தரைமட்டம், 2 பேர் பலி…

காந்தி நகர்: குஜராத்  மாநிலத்தில் பூமிக்கு அடியில் செல்லும் ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் வெடித்து விபத்தை ஏற்படுத்தியது. இதில் அந்த பகுதியில் இருந்த  2 வீடுகள் தரைமட்டமானதுடன்,2 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உ ள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகர் கலோல் பகுதியில்,  ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் வெடித்து சிதறியது. இதன் தாக்கத்தால், அந்த பகுதியில் இருந்த  2 வீடுகள் இடிந்து  நொறுங்கியது. இந்த விபத்தில்,  2 பேர் கொல்லப்பட்டனர்,  ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந் தசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இறந்தவர்களை மீட்டு உடற்கூறாய்வு சோதனைக்கும், காயமடைந்தவரை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்துஓஎன்ஜிசி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படாதவாகு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதி மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இதையடுத்து, அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.