கமதாபாத்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான ஹாசன் ஷபின் என்னும் இளைஞர் நாட்டின் மிக இளைய ஐபிஎஸ் அதிகாரி என்னும் பெருமை பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள கனோடர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஹசன் ஷபீன். இவருடைய பெற்றோர் முஸ்தபா ஹசன் மற்றும் நசீமா பானு. இருவரும் வைர நகை தொழிலாளர்களாக பணி புரிகின்றனர். அவர்களது ஊதியம் குடும்பத்தின் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததால் ஷபின் கல்விச் செலுக்கு மிகவும்  சிரமப்பட்டுள்ளார்.

அவருடைய கல்விக்கு உதவும் வகையில், நசீமாபானு, உள்ளூர் உணவகங்களுக்கு சப்பாத்தி செய்து கொடுத்து பணம் சம்பாதித்துள்ளார். அது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஷபின் படிப்பிற்கு உதவி செய்துள்ளனர்.

ஷபின் இளம் வயது முதல், சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். இவர் கடந்த 2018-ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 570வது ரேங்க் பெற்று ஐ.பி.எஸ்.,ஆக தேர்வானார். ஆயினும் ஐ.ஏ.எஸ்.,ஆக வேண்டும் என விரும்பியுள்ளார். வரும் 23ஆம் தேதி இவர் ஜாம்நகர் போலீஸ் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார்.

ஹாசப் ஷபின் “மீண்டும் ஐஏஎஸ் ஆக தேர்வு எழுதினேன், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் ஐபிஎஸ் பணியில் தொடர உள்ளேன்.  நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டிற்கு சேவை செய்வேன்” என்று  கூறி உள்ளார்.   தனது 22 ஆம் வயதில் அதிகாரியாக ஆகி உள்ள ஹாசன் ஷபின் இந்தியாவின் மிக இளைய ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.