குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு

குஜராத்:

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் குஜராத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,604 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 58 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 14,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,906 ஆக உள்ளது. இதுவரை 1,991 பேர் குணமடைந்துள்ளனர். 480 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

மகாராஷ்டிரம், டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலங்களாக இருந்தன.

தற்போது குஜராத் மாநிலத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்றைய நிலவரப்படி 1,604 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 58 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி