குஜராத்- பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

சூரத்:

குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், அமிர்தசரஸ் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குஜராத்தில் தேவையான முன்னெச்சரிகை நடவடிகை எடுக்க குஜராத் முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் நேற்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவாகியது. இதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

சூரத்தில் உள்ள சௌராஷ்டிரா பிராந்தியத்தின் பாவ்நகர் நகர் பகுதியில் பகல் 11.23 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8-க பதிவாகியது. அதேபோல் பாவ்நகர், அம்ரேலி, பாலிடானா, சாவர்குண்ட்லா, அதாஜன் ஆகிய பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்போல் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிலும் லேசா  நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் லாகூர், ஷேக்புரா பகுதியிலும் உணரப்பட்டது செய்திகள் தெரிவிக்கின்றன. வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வீதிகளுக்கு வந்தனர்.