காந்திநகர்:

குஜராத் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஆட்டோ டிரைவர் மகள் ஆஃப்ரீன் ஷைக் என்ற மாணவி 99.31 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

அகமதாபாத் ஜூகாபுராவில் உள்ள ஃஎப்டி பள்ளியை சேர்ந்த இவர் மருத்துவ கல்வி பயின்று டாக்டராவது தனது விருப்பம். ‘‘எனது குடும்பத்தில் யாருமே மருத்துவ துறையில் இல்லை. அதனால் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வது எனது லட்சியமாகும். அதற்கு ஏற்ப பிளஸ் 1ல் அறிவியல் பாடத்தை தேர்வு செய்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் குறைவான வருவாயை கொண்டு மகளின் கல்வி செலவை சமாளிக்க முடியாமல் அவரது தந்தை ஷேக் முகமது ஹம்சா சிரமப்பட்டு வருகிறார்.