அகமதாபாத்: வாக்காளர்களை மிரட்டியதாய் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, குஜராத் மாநில பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவஸ்தவாவுக்கு தேர்தல் அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 3ம் தேதி, குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக ஸ்ரீவஸ்தவா மீது குற்றம் சாட்டப்பட்டது.

வதோதரா ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷாலினி அகர்வால், மாவட்ட காவல் ஆய்வாளருக்கு விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீவஸ்தவாவுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டிருந்ததாகவும், அதற்கு அவர் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை என்பதால், அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

– மதுரை மாயாண்டி