ரெம்டெசிவிர் மருந்து விநியோக விவகாரம் – ஆணவமாக பதிலளித்த குஜராத் பாஜக தலைவர்!

அகமதாபாத்: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, முறைகேடாக பயன்படுத்தியது குறித்து எழுந்த புகாருக்கு, ஆணவமாக பதிலளித்துள்ளார் குஜராத் மாநில பாஜக தலைவர்.

‍கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்கு, ரெம்டெசிவிர் மருந்து பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், இம்மருந்தின் விலையை, தனியார் மருந்து நிறுவனங்கள் கணிசமாக குறைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் அம்மருந்து சட்டவிரோதமாக விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பட்டீலிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு அவர் மிகுந்த ஆணவத்துடன் பதிலளித்துள்ளார்.

“இது எங்களின் மருந்து. நாங்கள் எதையும் செய்வோம். அதைக் கேட்பதற்கு நீங்கள் யார்?” என்று ஆணவமாக பதிலளித்துள்ளார் அவர்.

குஜராத் மாநிலத்தில், கொரோனா தொற்று மிக மிக மோசமாக கையாளப்படும் நிலையில், மாநில பாஜக தலைவரின் இந்த பதில், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.