Random image

பாலியல் புகார்: குஜராத் பா.ஜ. துணை தலைவர் ராஜினாமா

ஆமதாபாத்:

பாலியல் புகாரில் சிக்கிய குஜராத் பா.ஜ. மாநிலதுணை தலைவர் ஜெயந்த் பஹானுஷாலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் அடபாஷா தொகுதி எம்எல்ஏ வுமான  ஜெயந்த் பஹாஷாலி மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்ப்டடதை தொடர்ந்து,  அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, மாநிலதலைவர் ஜித்து வகானியிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

54 வயதான  ஹாஷாலி மீது கடந்த 10-ம் தேதி சூரத் நகரைச் சேர்ந்த 21 பெண் ஒருவர் பாலியல் புகார் கூறினார். தனக்கு பேஷன் டெக்னாலஜி கல்லூரியில் இடம் கிடைக்க உதவுமாறு கோரிய போது, அவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்தாக குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று ஜெயந்த் பாஹானுஷாலி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை பா.ஜ.மாநில தலைவர் வகானியிடம் சமர்பித்தார். தாம் நிரபராதி என்பதை கோர்ட் மூலம் நிரூபிப்பேன் என்றும் கூறி உள்ளார்.

இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.