அகமதாபாத் மாவட்ட பஞ்சாயத்து வார்டில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரினா பட்டேல் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.

நரோடா என்ற இடத்தில் அவர் இப்போது அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அவருக்கு சொந்த ஊரான கன்பா கிராமத்திலும் வீடு உள்ளது. அந்த வீட்டின் முகவரியை தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் பூட்டியே கிடக்கும் அந்த வீட்டில் கழிப்பறை கிடையாது. ஆனால் தனது வீட்டில் கழிப்பறை உள்ளது என அவர் தனது அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கிரினாவை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர், மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது “கன்பா கிராமத்தில் உள்ள கிரினா வீட்டில் கழிப்பறை இல்லை. எனவே அவரது மனுவை ஏற்க கூடாது” என பா.ஜ.க. வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்து கிரினாவிடம், விசாரித்த போது, கிராமத்து வீட்டில் கழிப்பறை இல்லை’ என்பதை ஒப்புக்கொண்டார்.

இதனால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ரத்து செய்தார்.

– பா. பாரதி