குஜராத் முதல்வரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி : வேட்புமனுத் தகவல்

ராஜ்கோட்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. கோடி என வேட்பு மனுவில் அறிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14 தேதிகளில் நடைபெற உள்ளது.  முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் சொத்த்துக்களின் மதிப்பு ரூ.9.08 கோடி ரூபாய் என குறிப்பிடப் பட்டுள்ளது.  கடந்த 2014ஆம் ஆண்டில் இடைத்தேர்தலில் தனது சொத்துக்களின் மதிப்பு ரூ.7.21 கோடி என ரூபானி குறிப்பிட்டிருந்தார்.

விஜய் ரூபானியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3.45 கோடி எனவும் அவரது மனைவியின் பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1.97 கோடி எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இந்திரனில் ராஜ்யகுருவின் சொத்து மதிப்பு ரூ.141 கோடி என வேட்பு மனுவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த 2012 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தனது சொத்துக்களின் மதிப்பு ரூ.122 கோடி என குறிப்பிட்டிருந்தார்.  இவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.16.63 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது