சென்னை:

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று  ‘வாட்ஸ் அப்’ டிசைனில் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு விநியோகித்திருப்பதாக ஊடகங்களில்  செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இந்த டிசைன் 3 ஆண்டுகளுக்கு முன்பே  தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தது, ஆனால் இன்று வடநாட்டு ஊடங்கங்களோ இன்று அவர்கள் ஊரில் உருவாக்கிய டிசைனை பெரிய விசயமென்று கொண்டாடுகிறார்கள், கணினித் துறையில் எப்போதும் தமிழர்கள்தான் முன்னிலை,

குஜராத் இளஞ்ஜோடி திருமண அழைப்பிதழ்

குஜராத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தங்களது திருமண அழைப்பிதழை வித்தியாசமாக வடிவமைக்க எண்ணி  சூரத்தை சேர்ந்த சிந்தன் என்பவரை நாடி உள்ளனர். அவரும், திருமண அழைப்பிதழை ‘வாட்ஸ் அப்’ டிசைனில்  வடிவமைத்து காண்பித்து உள்ளார். இது புதுமையாக இருப்பதாக நம்பிய அந்த டிசைனை உறுதி செய்து அழைப்பிதழ் அடித்து விநியோகித்து வருகின்றனர். இந்த டிசைன் புதுமையாக செய்திருப்பதாக வட நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

ஆனால், இந்த டிசைன் 3 ஆண்டுகளுக்கு முன்பே தனது தங்கை திருமணத்துக்காக வடிவமைத்த தாக சேலம் அருகே உள்ள கிருஷ்ணகிரியை  சேர்ந்த விசுவல் மீடியோ உரிமையாளர் செல்வ முரளி தெரிவித்து உள்ளார்.

ஆனால், அதுபோன்ற டிசைனை தற்போது குஜராத்தில்தான் முதன்முதலாக வடிவமைத்ததாக வட இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தி வருகின்றன.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,   WhatsApp மாதிரி பத்திரிக்கை வடிவமைச்சதை யெல்லாம் இன்னைக்கு செய்தியா வருதே, என் தங்கை Priya Karthick திருமணத்துக்கு மூணு வருசதுக்கு முன்னாடியே நான் வாட்ஸப் வடிவில் பத்திரிக்கை வடிவமைச்சேன், இது கூட இன்னைக்கு செய்தியாயிடுச்சே… என்று தெரிவித்து உள்ளார்.

2015ம் ஆண்டு தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்

செல்வமுரளி, தமிழ்வழி இணை சேவையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ள இவர், விவசாயிகளின் தேவைக்காக அக்ரிசக்தி என்ற மொபைல் செயலியையும் உருவாக்கி உள்ளார். பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் உலக தமிழ் இணைய மாநாடுகளிலும் பங்கேற்று இணையத்தில் தமிழின் வளர்ச்சி குறித்து அறிவுறுத்தி உள்ளார்.