பிட்காயின் வழக்கில் பாஜக முன்னாள் எம் எல் ஏ குற்றவாளி : குஜராத் நீதிமன்றம்

 

கமதாபாத்

பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நளின் கொடாடியாவை பிட்காயின் அபகரிப்பு வழக்கில் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சூரத் நகரை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் சைலேஷ் பட்.   இவருடைய வர்த்தக கூட்டாளி கிரிட் பலாடியா.   சைலேஷ் பட் ஒரு புகாரை அளித்தார்.  அதில் அவர், “எனது கூட்டாளி கிரிட் பலாடியாவை அம்ரேலி காவல்நிலைய அதிகாரிகள் கடத்திச் சென்றனர்.   அவரை திருப்பி அனுப்ப என்னிடம் இருந்து ரூ.9.95 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி எனப்படும்  பிட்காயினைபறித்துக் கொண்டனர்” என தெரிவித்திருந்தார்.

விசாரணையில் காவல்துறை சூப்பிரண்ட் ஜகதீஷ் படேல் மர்றும் சில காவலர்களுடன் சேர்ந்து  பலாடியா நடத்திய நாடகம் என கண்டறியப்பட்டது.    அத்துடன் சைலேஷ் பட்டிடம் உள்ள ரூ.155 கோடி மதிப்புள்ள பிட் காயின்கள் அனைத்தும் அவர் பலரை மிரட்டி பறித்தது எனவும் அதற்கு அவருடன் கூட்டாளியாக செயல்பட்டது பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நவின் கொடாடியா என்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து  கொடாடியா மற்றும் பட் ஆகிய இருவரும் தலைமறைவு ஆகி விட்டனர்.   இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கொடாடியா மற்றும் பட் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.   அத்துடன் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.