“தி ஒயர்” ஊடகம் மீது அதானி தொடுத்த வழக்கு தள்ளுபடி

கமதாபாத்

குஜராத் நீதிமன்றத்தில் தி ஒயர் என்னும் செய்தி ஊடகத்தின் மீது அதானி தொடுத்த மான நஷ்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம்  ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று தி ஒயர் என்னும் செய்தி ஊடகம் பிரண்ஜாய் குகா என்னும் பொருளாதார நிபுணர் எழுதிய செய்திக் கட்டுரையை வெளியிட்டது.  அதில் மத்திய அரசு சிறப்பு ஏற்றுமதி பகுதிக்கான விதிகளை அதானி நிறுவனங்களுக்காக மாற்றி அமைத்ததாக கூறி இருந்தது.  மேலும் இதனால் அந்த நிறுவனம் உற்பத்திக்கான பொருட்கள் வாங்குவதில் முறைகேடு செய்து ரூ. 500 கோடி லாபம் ஈட்டியதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.

இந்த செய்திக்கு அதானி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து நோட்டிஸ் அனுப்பியது.  அதனால் அந்த  செய்தியை ஊடகம் நீக்கியது.  அதன் பிறகு அதே கட்டுரை முதலில் வெளிவந்த ஊடகத்தின் அனுமதியுடன் தி ஒயர் மீண்டும் வெளியிட்டது.  அதை ஒட்டி அதானி நிறுவனம் இதை எழுதிய பிரண்ஜாய் மற்றும் தி ஒயர் ஊடகம் ஆகியோரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி என் ஆர் ஜோஷி வழங்கினார்.  அப்போது அவர் இந்த வழக்கு சரியான காரணம் இல்லாமல் தொடுக்கப்ப்ட்டதாக தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.