Random image

குஜராத்: உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் படேலுடன் ஆ.ராசா சந்திப்பு

காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிதார் அனாமத் அன்டோலன் சமிதி இயக்க தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் மீண்டும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவரது போராட்டம் நேற்று 13-வது நாளாக நீடித்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை இன்றும் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் இன்று மருத்துவமனைக்கு சென்று ஹர்திக் பட்டேலை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.