மோடியின் ஒற்றுமைச் சிலையும் சிபிஐயின் ஒற்றுமையும் : முன்னாள் முதல்வர்

--

கமதாபாத்

ர்தார் படேல் சிலையை ஒற்றுமையின் சிலை என கூறிய மோடி முதலில் சிபிஐக்குள் ஒற்றுமையை கொண்டு வரட்டும் என முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வாகேலா கூறி உள்ளார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உலகின் மிக உயரமான சர்தார் வல்லப் பாய் படேல் சிலை நாளை (அக்டோபர் 31 ஆம் தேதி) திறக்கப்பட உள்ளது.   பிரதமாரால் திறக்கப்பட உள்ள  இந்த சிலையை ஒற்றுமையின் சிலை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.   இதை குஜராத் மாநில முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வாகேலா கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வாகேலா, “பிரதமர் மோடி சர்தார் வல்லப் பாய் படேல் சிலை திறப்பில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்.   மோடி முதல்வாக இருந்த போது அகமதாபாத் விமான நிலையம் அருகே அமைத்த படேல் நினைவு மண்டபத்துக்கு எத்தனை முறை சென்றுள்ளார்?  படேல் சிலை திறப்பில் ஆர்வம் காட்டும் மோடி அதே படேல் இனத்தை சேர்ந்த போராளியை சிறையில் இருந்து விடுவிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்.

படேல் இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.   ஆனால் மோடி அடிக்கடி படேலுக்கு அநீதி நடந்துள்ளதாக தெரிவித்து வருகிறார்.   நான் படேல் மகளை சந்தித்துள்ளேன்.  அவர் எப்போதுமே தனது தந்தைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததில்லை.  ஆனால் நான் முதல்வராக இருந்த போது அகமதாபாத் விமான நிலையத்தை சர்தார் படேல் விமான நிலையம் என பெயர் மாற்றியதற்கு எனக்கு பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

குஜராத் மாநிலம் தற்போது ரூ.,2,50,000 கோடி கடனில் தத்தளித்து வருகிறது.   இந்நிலையில் சர்தார் படேலுக்கு சிலை அமைக்க ரூ.3000 கோடி செலவு செய்வது வீணான செயலாகும்.   திடீரென உங்களுக்கு படேல் மீது இத்தகைய அன்பு எவ்வாறு உண்டானது?  இதுவரை அவர் பெயரைக் கூட நீங்கள் அடிக்கடி சொன்னதில்லை.   இப்போது தேர்தலில் வாக்குகள் பெற பாஜக செய்யும் யுக்தி இந்த சிலை திறப்பாகும்.

இந்த சிலையை ஒற்றுமையின் சிலை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.  இந்த ஒற்றுமையின் சிலையை திறப்பதை விட சிபிஐ அமைப்பில் ஒற்றுமையைக் கொண்டு வர மோடி பாடுபடட்டும்.   அத்துடன் ரிசர்வ் வங்கியிலும் ஒற்றுமையின்மை நிலவி வருகிறது..   அதை செய்ய மோடி ஆர்வம் காட்டட்டும்” என கூறி உள்ளார்.