காந்தி தேசத்தில் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் முன்னாள் முதல்வர்..

மகாத்மா காந்தி அவதரித்த குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி  குஜராத் மாநில முன்னாள் முதல்-அமைச்சர் சங்கர் சிங் வகேலா, டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ், பா.ஜ.க., தேசிய வாத காங்கிரஸ் என அனைத்து தேசிய கட்சிகளிலும் இருந்துள்ள வகேலா தனது  டிவிட்டர் பதிவில்.’’ குஜராத் மாநிலத்தில், சுற்றுலாத் துறை மேம்பாடு அடைய வேண்டுமானால் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 அவரது பதிவு இது :

‘’இன்று உலக சுற்றுலா தினம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குஜராத் மாநிலம் சுற்றுலாத் துறையில் ஏன் பின் தங்கி உள்ளது என்பதை யோசிக்க வேண்டும். சுற்றுலாத் துறை வருமானமும், வேலைவாய்ப்பும் அளிக்கும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டுமானால்,குஜராத்தில் மதுவிலக்கை நீக்க வேண்டும்.

சமூகம் மாறிவிட்டது. விருந்தில் குடிப்பது, ஓர் அங்கமாகி விட்டது. நல்லது, கெட்டதை மக்கள் தீர்மானிக்கட்டும்.

நான் 1996 ஆம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த போது மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்தேன். கூட்டணி ஆட்சி நடத்தியதால் முடியவில்லை.

நான் மீண்டும் முதல்வரானால். பதவி ஏற்ற நூறு நாட்களில் மது விலக்கை ரத்து செய்வேன்’

இவ்வாறு  தெரிவித்துள்ளார், 80 வயதான குஜராத் மாநில முன்னாள் முதல்-அமைச்சர் வகேலா.

-பா.பாரதி.