குஜராத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து: 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன

அகமதபாத்: குஜராத் மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ரசாயன ஆலை ஒன்று இருக்கிறது. அந்த தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்று, தீயணைக்கும் பணியில் இறங்கினர்.

தீ விபத்தின் போது கடும் புகைமூட்டம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? ஆலையின் உள்ளே யாரேனும் உள்ளனரா என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.