சென்னை, திருவள்ளூரில் நகர எரிவாயு உரிமம்: அதானியை வென்ற குஜராத் நிறுவனம்

சென்னை: குஜராத்தை தளமாக கொண்ட டோரண்ட் கேஸ், சென்னை மற்றும் திருவள்ளூரில் விநியோகிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தந்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் சென்னைக்கான நகர எரிவாயு உரிமத்தை டொரண்ட் கேஸ் நிறுவனம் பெற்றது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதானி குழுமம் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் டோரண்ட் கேஸ், சென்னை மற்றும் திருவள்ளூரில் விநியோகிக்க ஒப்புதல் தந்திருக்கிறது. ஏலத்தில் வெற்றி பெற்றவரின் நியாயமற்ற அதிக ஏலத்தை, கட்டுப்பாட்டாளர்கள் நிராகரித்திருக்க வேண்டும் என்ற அதானி குழும வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

ஏலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்துடன் தான் உள்ளது. இதில் அந்த வாரியம் எந்த கொள்கைகளை மீறவில்லை என்று கூறி இருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, டோரண்ட் கேஸ் நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூரில் நகர எரிவாயு உள்கட்டமைப்பை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க இந்த தீர்ப்பு உதவும் என்று தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Adani, gas cyclinder, supreme court, torrent gas, அதானி, உச்ச நீதிமன்றம், கேஸ் சிலிண்டர், டோரண்ட் கேஸ்
-=-