படேல் சிலை திறப்பு விழாவுக்கு அவர் பேரன் வருவாரா ?

டோதரா

லகின் மிகப் பெரிய சிலையா சர்தார் வல்லப் பாய் படேல் சிலை திறப்பு விழாவுக்கு அவரது ஒரே வாரிசான பேரன் வருவாரா என்பது சந்தேகமாக உள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் சர்தார் வல்லப் பாய் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியவர் ஆவார். சுதந்திரத்துக்கு முன்பு பல சாம்ராஜ்யங்களாக பிரிந்திருந்த பிரதேசங்களி ஒருங்கிணைத்ததால் அவரை சுதந்திர இந்தியாவின் சிற்பி எனவும் அழைத்தனர். அவருடைய சிலையை  பாஜக அரசு வரும் 31 ஆம் தேதி வடோதரா நகரில் திறக்க உள்ளது.

                                            மனைவியுடன் கௌதம்

உலகின் மிகப் பெரிய சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ள படேல் சிலை திறப்பு விழாவுக்கு அவருடைய வாரிசுகளை அழைக்க குஜராத் அரசு பெரிதும் முயன்று வருகிறது. படேல் குடும்பத்தில் அவர் மனைவி ஜவேர்பா, மகன் தயாபாய் மற்றும் மகள் மணிபென் ஆகியோர் உள்ளனர். படேலும் அவர் மனைவியும் பல வருடம் முன்பே மரணம் அடைந்துள்ளனர்.

வல்லப் பாய் படேலுடன் கௌதம்

படேல் மகள் மணிபென் கடந்த 1993ஆம் வருடம் இறக்கும் வரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. படெல் மகனுக்கு இரு மகன்கள் பிபின் மற்றும் கௌதம் என்னும் பெயரில் பிறந்தனர். பிபினுக்கு குழந்தைகள் இல்லை. அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இறந்தார். அவர் சகோதரர் கௌதம் தற்போது 78 வயதான முதியவராக உள்ளார்.

அவருடைய மகன் கேதன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி உள்ளதால் கௌதம் தனது மகனுடன் வசிக்க அடிக்கடி சென்று வருகிறார். சுமார் ஒரு மாதம் முன்பு அமெரிக்கா சென்றுள்ள அவரை தொடர்பு கொள்ள குஜராத் முதல்வர் அலுவலக அதிகாரிகள் பெரிதும் முயன்று வருகிறார்கள். ஆனால் அவருடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களை அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது படேலின் பேரன் கௌதமை அரசு தேடி வரும் நிலையில் இதுவரை அவர் ஒரே ஒரு அரசு விழாவுக்கு மட்டும் அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2003 ஆம் வருடம் மார்ச் மாதம் நடந்த அந்த விழாவுக்குப் பிறகு அவர் எந்த விழாவுக்கும் அழைக்கப்படவில்லை. அழைக்கப்பட்ட ஓரிரு விழாக்களிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை.

எனவே வரும் 31 ஆம் தேதிக்குள் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை எனில் சுமார் 11000 பேர் கலந்துக் கொள்ளும் படேல் சிலை திறப்பு விழாவுக்கு படேலின் ஒரே பேரன்  வர மாட்டார் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.