குஜராத் : வைரலான லஞ்ச ஆடியோ : அரசு விவரங்களை வெளியிட அதிகாரிகளுக்கு தடை

காந்திநகர்

ரசுத் துறைகளில் லஞ்சம் குறித்து அதிகாரி ஒருவர் பேசிய ஆடியோ வைரலானதை ஒட்டி அரசு அதிகாரிகள் எந்த விவரத்தையும் வெளியிட குஜராத் அரசு தடை விதித்துள்ளது.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தகவல் ஆர்வலர் கிஷோர் நாத்வானி என்பவ்ர் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவில் கிஷோர் ஒரு அரசு அதிகாரியிடம் அரசுப் பணிகள் வேலை தரக்குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டுகிறார். குறிபாக குஜராத் அரசுத்துறையான குஜராத் பவித்ர யாத்ராதாம் விகாஸ் போர்ட் செய்துள்ள பணிகள் குறித்து கேள்விகள் எழுப்புகிறார்.

அப்போது உள்ளாட்சி முன்னேற்றத் துறை கூடுதல் செயலர் அனில் படேல் அதற்கு பதில் அளிப்பது போல் அந்த ஆடியோ பதிவில் உள்ளது. அனில் படேல் இதற்கு முன்பு குஜராத் பவித்ர யாத்ராதாம் விகாஸ் போர்ட் செயலராக பத்து வருடம் பணி புரிந்துள்ளார். அவர் தனது பதிலில் இந்த போர்ட் குஜராத் மாநிலத்தில் உள்ள புனிதத் தலங்கள் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை இயற்றி உள்ளதாகவும் அதில் ஏராளமான லஞ்சம் விளையாடியதாகவும் தெரிவிக்கிறார்.

அத்துடன் தாம் லஞ்சத்தை எதிர்த்து குரல் எழுப்பி வருவதாகவும் இது குறித்து அரசுக்கு பல முறை புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அனில் படேல் தெரிவிப்ப்பது போல் அந்த ஆடியோ பதிவு அமைந்துள்ளது. அத்துடன் அந்த திட்டங்களுக்காக நடந்த பல வேலை வாய்ப்புக்கலிலும் ஏராளமான் லஞ்சம் பெறப்பட்டதாக்வும் அவர் தெரிவிக்கிறார். மேலும் இந்த லஞ்ச விவகாரங்களால் பணிகள் தரம் மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை உண்டாக்கியது. அது பலராலும் பரப்பப் பட்டு வைரலானது. அதை ஒட்டி குஜராத் மாநில அரசு அனைத்து அதிகாரிகளுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்றை அளித்துள்ளது. அதன்படி அரசு அதிகாரிகள் அரசு தொடர்பான எந்த விவரங்களையும் வெளிப்படையாக பேசக்கூடாது என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.