ஆமதாபாத்:

பா.ஜ.வை எதிர்க்கும் எந்த கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக, பதிதார் அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இங்கு ஆளும் கட்சியான பா.ஜ.க – எதிர்க்கட்சியான காங். இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

ஆனாலும் பெரும்பான்மையாக உள்ள பட்டேல் சமூகத்தின் சார்பான அனாமத் அந்தோலன் சமிதியும்” இம்முறை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான ஹர்திக் பட்டேல், தனது சமுதாயத்தினரின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இவர் பா.ஜ.வையும் அதன் தலைமையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே, ஹர்திக் பட்டேல் தனது அமைப்பை காங்.கட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த திங்கட் கிழமை அன்று, காங்.துணை தலைவர் ராகுல், மூத்த காங்.தலைவர் அசோக் கெலாட் ஆகியோரை ஹர்திக் ரகசியமாக சந்தித்ததாக வீடியோ ஆதாரங்களுடன் உள்ளூர் டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டன.

இது தொடர்பாக ஹர்திக்பட்டேலிடம் கேட்டபோது, அவர் மறுக்கவில்லை. பா.ஜ.வை எதிர்க்கும் எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயார் அது காங்.கட்சியாக இருந்தாலும் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தார். இதற்கிடையே டி.வி.சானல் ஒன்று வெளியிட்ட கருத்து கணிப்பில் குஜராத் தேர்தலில் பதிதார் அமைப்பு 21 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்தது.

ஏற்கெனவே அங்கு ஆளும் பா.ஜ.க. மீது மக்களுக்கு ஏர்பட்டிருக்கும் அதிருப்தி, காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு பெருகி வரும் ஆதரவு மர்றும் பதிதார் அமைப்பின் ஆதிக்கம் ஆகியவற்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அங்கு பா.ஜ.க. பெரும் தோல்வி அடையும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.