அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் புபேந்திரா சிங் அறிவித்து உள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது இணைய வழியில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் புபேந்திரா சிங் அறிவித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: முதல் கட்டமாக 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும். நவம்பர் 23ம் தேதியே கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என்றார்.