அகமதாபாத்:

இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போலியோ வைரஸ் பரவி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பபாடு மையம் உலகளவில் பொது நலன் கருதி போலியோ வைரஸ் பரவுகிறது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், இந்த அறிவிப்பை குஜராத் அரசு கண்டு கொள்ளவில்லை. எனினும் தெலங்கானா மாநில அரசு இந்த எச்சரிக்கையை சர்வதேச அவசரமாக அறிவித்தது. இதையடுத்து ஜெனிவாவில் இருந்து 2 லட்சம் தடுப்பு மருந்துகளை வரவழைத்து ஐதராபாத் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் கழிவுநீர் நீரோடைகளில் இருந்து 500 மாதிரிகளை எடுத்து பரிசோதனைகள் மேற்கொண்டதில் சில போலியோ தாக்குதல் இருப்பதற்காக அறிகுறி முடிவுகளில் வந்துள்ளது என்று சுகாதார துறை ஆணையர் குப்தா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மாதிரிகள் மீது நடத்தப்ப்டட சோதனையில் சாபின் 2ம் ரக போலியோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 1, 2, 3, ரக போலியோ தடுப்பு மருந்தில் இருந்து 1, 3 ரக போலியோ தடுப்பு மருந்தக்கு மாறுவதாக அம்மாநில சுகாதார மையம் அறிவித்த 4வது மாதத்தில் 2ம ரக வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது அங்குள்ள மருத்துவமனைகளில் 1,3 ரக போலியோ தடுப்பு மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் 8 தனியார் மருத்துவமனைகளில் 2ம் ரக நோய்க்கான தடுப்பு மருந்துகள் 11ம், மற்றும் சில சில்லரை விற்பனையாளர்களிடம் இருப்பது தெரியவந்தது. இதுவும் 2016 டிசமபர் முதல் 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தை காலாவதி தேதியாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கைவசம இருந்த இந்த ரக தடுப்பு மருந்துகள் அழிக்கப்பட்டுவிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தடுப்பூசி இல்லாமல் அவதியுறும் சூழல் உருவாகியுள்ளது.