குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக நியமனம்!

ராகேஷ் அஸ்தானா

டில்லி,

சிபிஐ-க்கு சிறப்பு இயக்குனராக ராகேஷ்அஸ்தானாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இவர்  குஜராத் மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர்.

இவருக்கு தற்போது சி.பி.ஐ சிறப்பு இயக்குநராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பணியாளர் நலத்துறை, நாட்டின் முக்கியத் துறைகளின் தலைமை அதிகாரிகளை மாற்றம்செய்து மத்திய  அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  இந்தப் புதிய அறிவிப்பின்படி, சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மற்றும், உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக குர்பாச்சன் சிங், சி.ஆர்.பி.எஃப் சிறப்பு டி.ஜி-யாக சுதீப் லக்டாகியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேஷ்வரி ஆகியோருக்கு எல்லைப் பாதுகாப்புப் படை சிறப்பு டி.ஜி-யாகப் பதவிஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவி உயர்வு பெற்றவர்களில் பலர், 1984-ம் ஆண்டு ஐ.பி.எஸ் கேடரை சேர்ந்தவர்கள்.