டில்லி

டந்த 2018-19 வருமான வரிக்கணக்கு ஆண்டில் அதிக அளவில் கணக்கு அளிக்கும் மாநிலங்கள் குறித்த பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிக்கணக்குகளை அளித்து வருகின்றனர்.    இதில் அனைத்து தனிப்பட்டோருக்கும் கணக்கு அளித்தல் கட்டாயம் இல்லை என அறிவிக்கபட்டுள்ளது.

அதே வேளையில் வர்த்தகம் மற்றும் நிறுவனங்க்ளுக்கு வருமானம் இல்லை என்றாலும் அதை தெரிவித்து க்ணக்கு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை பட்டியலின்படி சென்ற வருடமான 2018-19 கணக்கு வருடத்தில் டில்லியை விட அதிக அளவில் குஜராத் மாநிலத்தில் அதிக அள்வில் கணக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநிலத்தில் நாட்டின் மொத்த கணக்கில் 22.3% கணக்குகள் பதிவாகி உள்ளன. டில்லியில் 20.5% பதிவாகி உள்ளன.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பஞ்சப் மாநிலத்தில் 16.74%, தெலுங்கானாவில் 16.68% கணக்குகள் பதிவாகி உள்ளன.  பீகார் மாநிலத்தில் மிகக் குறைந்த அளவில் அதாவது 5% பதிவாகி உள்ளன.

இதைவிட அதிகமாக உத்தரப்பிரதேசத்தில் 8.11% பதிவாகி உள்ள்து.  நாட்டின் மொத்த  சராசரி 12%  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.