நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற IPL 2016யின் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசெர்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசெர்ஸ் குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
FotorCreated
புவனேஸ்வர் குமார்யின் அற்புதமான பந்துவீச்சில் குஜராத் அணி அதிக ரன் எடுக்க முற்றுகட்டையாக இருந்தார். இந்த போட்டி வரை சிறப்பாகக பேட்டிங் செய்த பிஞ்ச முதல் ஓவரிலேயே அவுட் அனார் இதுவே குஜராத் அணிக்கு ஒரு பெரும் இழப்பாக கருதப்பட்டது. ஒருபுறம் விக்கெட்கள் சரிய, மறுபுறம் ரைனா மட்டும் தனது அபாரமான பேட்டிங் மூலம் குஜராத் அணி 20 ஓவரில் 135/8 எடுக்க முக்கிய காரணமாக இருந்தார்.
ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் தவான் சிறப்பான ஆட்டதின் மூலம் விக்கெட் இழப்பின்றி ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். குஜராத் அணிக்கு இந்த தோல்வி இந்த வருட IPLலில் முதல் தோல்வியாக அமைந்தது.
குஜராத் லயன்ஸ் 135 for 8 (ரைனா 75, புவனேஸ்வர் குமார் 4-29) – ஹைதராபாத் சன்ரைசெர்ஸ் 137 for 0 (வார்நேர் 74*, தவான் 53*)