குஜராத் : பாஜக மீதான மக்கள் வெறுப்பால் லாபமடையும் காங்கிரஸ்

கமதாபாத்

குஜராத் மாநில ஆளும் கட்சியான பாஜகவின் மீது பொதுமக்கள் அடைந்துள்ள வெறுப்பினால் காங்கிரஸ் லாபமடைய உள்ளதாக தெரிய வந்துள்ளதாக “டி என் ஏ இந்தியா” செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்த ஊடகத்தின் செய்தியில் காணப்படுவதாவது :

“தற்போதுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தின் அளும் கட்சியான பாஜக மிது பல சமூகத்தை சேர்ந்த மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர்.  படேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்காமை மற்றும் காவல்துறை தாக்குதலால் அந்த மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.  அதே போல் மது விலக்கு கொள்கைக்கு போராடும் தாகுர் இன மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது.   இதில் ஒரு சில தலைவர்களை இழுத்துள்ளது.   ஆயினும் பாஜகவால் மக்கள் அதிருப்தியை போக்க முடியவில்லை.   பல இடங்களில் பாஜக அறிவித்த பேரணிகள் பொதுமக்களின் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்துள்ளன.

பொதுமக்களின் இந்த கோபம் காங்கிரஸ் கட்சிக்கு லாபம் அளித்துள்ளது.   இது வரும் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என தெரிய வந்துள்ளது.   பாஜகவின் மேலுள்ள எதிர்மறை அணுகுமுறையால் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.   அந்த பயத்தில் காங்கிரஸின் பல தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது.”

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.