அகமதாபாத்:

ல்வேறு பாலியம் சம்பந்தமான புகார்களில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை,  கைது செய்ய குஜராத் காவல்துறையினர் புளு கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டு, கடத்தல் புகார்களில் சிக்கி உள்ள நித்தியானந்தா ஈக்வடார் நாட்டிற்கு சொந்தமான தீவை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டு,  அங்கு தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இமயமலையில் தங்கி உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 2 குழந்தைகளை கடத்தியது தொடர்பான வழக்கில், குஜராத்தில் உள்ள நித்தி யானந்தா ஆசிரமம் மூடப்பட்ட நிலையில், நித்தியானந்தாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நித்தியானந்தாவை பிடிக்க தீவிரம் காட்டி வரும் குஜராத் காவல்துறையினர், சிஐடிக்கு (Criminal Investigation Department ) அனுப்பி உள்ளனர்.

அதில், நித்தியானந்தாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாட வேண்டும் எனவும், இதற்காக புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் பரிந்துரைத்துள்ளனர்.

புளுகார்னர் நோட்டீஸ் என்பது, குற்றம் செய்து விட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு பிடிக்க உபயோகப்படுத்துவது. இதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் குற்றவாளி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளி எந்த நாட்டில் பதுங்கி உள்ளாரோ அந்த நாட்டின் காவல்துறையினரை அவர் பிடித்து ஒப்படைக்க வேண்டும்.

தற்போது புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் நித்தியானந்தா பிடிபடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.