அகமதாபாத்: குஜராத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமகக்ள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அம்மாநிலத்துக்குட்பட்ட ராஜ்கோட் நகருக்கு வடகிழக்கே 82 கிலோமீட்டர் தொலைவில் இன்று மதியம் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.

ராஜ்கோட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஆனாலும் இதன் காரணமாக கட்டடங்களுக்கு சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல்கள் இதுவரை இல்லை.

முன்னதாக, நேற்றிரவு ராஜ்கோட்டில் இருந்து வடக்கு – வடமேற்காக 122 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. நில நடுக்கம் உணரப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

5.8 ஆக பதிவான நிலநடுக்கம் சற்று சக்தி வாய்ந்தது தான், ஆனாலும், உயிர் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லையென்று குஜராத் அரசு கூறி இருக்கிறது.