குஜராத் சபரமதி ஆசிரமம் பார்வையாளர்களுக்கு மீண்டும் திறப்பு

கமதாபாத்

கமதாபாத் நகரில் காந்தியால் அமைக்கப்பட்ட சபர்மதி ஆசிரமம் மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் சபர்மதி நதிக்கரையோரம் மகாத்மா காந்தி ஒரு ஆசிரமத்தை அமைத்தார்,  இந்த ஆசிரமத்தின்  பெயர் சபர்மதி ஆசிரமம் ஆகும்,.   சபர்மதி ஆசிரமம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது,  இதைக் காண ஏராளமான பார்வையாளர்கள் வருவது வழக்கமாகும்.,

கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் ஒரே இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டது.  அதையொட்டி சென்ற வருடம் மார்ச் 20 முதல் சபர்மதி ஆசிரமம் மூடப்பட்டது.  அதன்பிறகு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த 9 மாதங்களாகத் தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் மூடப்பட்டு இருந்தது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.  அதையொட்டி திங்கள் முதல் சபர்மதி ஆசிரமம் திறக்கப்பட்டுள்ளது.,  இந்த ஆசிரமத்தைக் காணப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஆயினும் கொரோனா பரவல் காரணமாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையாளர்கள் அவசியம் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.