கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் இ சிகரெட் தயாரிக்க விற்க தடை செய்யும் தீர்மானத்துக்கு சட்டப்பேரவையில் முழு ஆதரவு கிடைத்துள்ளது.

எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ சிகரெட் என்பது ஒரு ஒரு மின்னணு கருவி ஆகும். இதில் நிகோடின், கிளிசரின் உள்ளிட்ட பல ரசாயனங்கள் நிரப்பபட்டிருக்கும். இக்கருவியின் பேட்டரியின் மூலம் அதில் உள்ள திரவ ரசாயனங்கள் ஆவியாகி பயன்படுத்துவோருக்கு வாய் மூலம் அனுப்பப்படுகிறது. இத்னால் புகை பிடிக்கும் போது உண்டாகும் உணர்வு அவர்களுக்கு உண்டாகும்.

இந்த இ சிகரெட் அறிமுகம் செய்யப்படும் போது, ”இந்த இ சிகரெட்டுகளை பயன்படுத்துவோர் புகை பழக்கத்தில் இருந்து விடுபடுவர். இதில் புகையிலை இல்லாததால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது” என கூறப்பட்டது. ஆனால் உண்மையில் நிகோடின் பழக்கத்துக்கு அடிமையாகி புகைக்கு பதில் இ சிகரெட்டுக்கு அடிமையாவார்கள் என்பதும் இதிலும் நிக்கோடின் உள்ளதால் அதே நோய் அபாயங்கள் உள்ளது என்பதுமே உண்மையாகும்.

எனவே இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் பல உலக நாடுகளில் இ சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடை செய்து வருகின்றன  குஜராத் மாநிலத்தில் இத்தகைய தடை உத்தரவு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு முழு ஆதரவை அனைத்துக் கட்சியினரும் அளித்துள்ளனர். அதை ஒட்டி இ சிகரெட் உற்பத்தி மற்ரும் விற்பனைக்கு  தடை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த தடை தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கியமாக விதிக்க வேண்டிய தடையான இதை உபயோகிப்பதற்கான தடை  விதிக்கப்படவில்லை.