தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய குஜராத் பாஜக தலைவர் (வீடியோ)

கமதாபாத்

குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிது வகானி தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி உள்ளார்.

இன்று நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி அனத்துக் கட்சி அலுவலகங்களிலும், அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், வீடுகள் மற்றும் குடியிருப்புகளிலும் தேசியக் கொடி ஏற்றி வைத்து கொடிக்கு மரியாதை செய்யப்பட்டது.

குஜராத் மாநில பாஜக அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. அம்மாநில பாஜக தலைவர் ஜிது வகானி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஆனல் அப்போது அவர் கொடியை தலைகீழாக ஏற்றி உள்ளார். கொடி தலைகீழாக பறந்ததை கவனிக்காமல் அங்குள்ளோர் கொடிக்கு மரியாதை செலுத்தி உள்ளனர்

இந்த நிகழ்வின் வீடியோ டிவிட்டரில் பதியப்பட்டுள்ளது. அந்த பதிவில், “குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிது வாகானி தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றி உள்ளார். இது தேச விரோதச் செயல் இல்லையா? தேசியக் கொடிக்கு இது அவமானமில்லையா? அவர் இதற்காக தண்டிக்கப் படலாமா?” என வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன.