தங்க நகை மற்றும் சீர்வரிசை கொடுத்து 1,300 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த தொழிலதிபர்!
சூரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களுக்கு தங்க நகைகள் மற்றும் சீர்வரிசை அளித்து தொழிலதிபர் திருமணம் செய்து வைத்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் மஹேஷ் சவானி. இவர் பிபி சவானி குழுமத்தின் தலைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் பிபி சவானி குழுமத்தின் சார்பில் 261 தந்தையில்லா பெண்களுக்கு அந்தந்த மத சம்பிரதாயத்தின் படி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த திருமணத்திற்காக சூரத் நகரில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டது. அதில் திருமணம் செய்யப்படும் பெண்களுக்கு தங்க நகைகள், வீட்டு உபயோகப் பொருட்களை சீதனமக மஹேஷ் சவானி வழங்கினார். அதுமட்டுமின்றி, அந்தந்த மதத்தின்படி திருமணம் நடந்த பெண்களுக்கு ஒரு தந்தையாக இருந்து சவானி அனைத்து சடங்குகளையும் செய்தார். அப்போது ஒரு மணப்பெண் கண்ணீர் விட்டபோது தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்த பெண்ணின் கண்ணீரை சவானி துடைத்து சமாதானம் படுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 2008ம் ஆண்டு மஹேஷ் சவானிக்கு திருமணம் நடைபெற்றது. சவானியின் திருமணத்திற்கு முன்பே அவரது தந்தை இறந்து விட்டார். இதனால் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளான சவானி 20112ம் ஆண்டு முதல் தந்தை இல்லாத ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வருகிறார். இதுவரை அவர் 1,300 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
மஹேஷ் சவானியில் இத்தகைய செயலுக்கு பலரும் பராட்ட்டுகளை தெரிவித்து வருகிறன்றனர்.